பள்ளி மாணவர்களுக்கு முறையான கவுன்சிலிங் அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்து இருக்கிறார். மாணவர்களின் மரணம் குறித்தும் அவர் பேட்டி அளித்துள்ளார். இன்று காலை சென்னையில் இருக்கும் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவன் நரேந்திரன் என்பவன் பரிதாபமாக உயிரிழந்தான். ஆசிரியர் தண்டித்ததை அடுத்து இவன் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.
தற்போது இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்து இருக்கிறார். அதில் அவர் '' மாணவர்களிடம் ஆசிரியர்கள் பழகும் விதம் குறித்து பயிற்சி அளிக்கப்படும். எப்படி மாணவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லித்தரப்படும்'' என்று கூறினார். மேலும் ''மாணவர்களுக்கு முறையான கவுன்சிலிங் அளிக்கப்படும். மாணவர்கள் விருப்பப்பட்டால், அவர்களுக்கு தேவைப்பட்டால் யோகா பயிற்சி அளிக்கப்படும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் ''மாணவர்களின் உடலையும் மனதையும் புரிந்து கொள்ள வேண்டும். இன்னொரு முறை இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.'' என்றார். மேலும் ''நரேந்திரன் உயிர் இழந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அவர் உயிரிழந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுவிட்டார்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
Minister for School Education Sengottaiyan speaks to media about school student Narendhiran death. He said that teachers should understand students. Tamilnadu government will arrange counselling classes for students. He also advised students to do yoga.