பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் சீதக்காதி. படத்தில் அவர் நாடக கலைஞராக நடிக்கிறார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் பிறந்தநாள் அன்று சீதக்காதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. போஸ்டரில் விஜய் சேதுபதி அடையாளம் தெரியாத அளவுக்கு வித்தியாசமாக இருந்தார். சீதக்காதி போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் படக்குழுவினருக்கு கீழக்கரையில் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. படத்தில் வள்ளல் சீதக்காதியை தவறாக சித்திரித்துவிடக் கூடாது என்று கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. தீபிகா படுகோனே நடித்த பத்மாவதி படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் படத்தின் பெயரை பத்மாவத் என்று மாற்றி ரிலீஸ் செய்கிறார்கள். படத்தை ரிலீஸ் செய்ய இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி படாதபாடு பட்டுள்ளார்.
A group from Kilakarai has requested Seethakathi team not to project Vallal Seethakathi in a wrong manner in Vijay Sethupathi starrer. It is noted that Seethakathi first look poster was released on Vijay Sethupathi's birthday.