சில நாட்களுக்கு முன் பேஸ்புக் நிறுவனம் மூளை மூலம் கணினியின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை வாங்கியது. இதை பேஸ்புக் நிறுவனம் பெரிய புரட்சியாக பார்த்தது. இந்த நிலையில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் மூளை மூலம் மொபைலில் இருக்கும் அப்ளிகேஷன்களை கட்டுப்படுத்தும் தொழில்நுடபத்திற்கு காப்புரிமை வாங்கியுள்ளது. ஸ்மார்ட்போன்களில் இருக்கும் அப்ளிகேஷன்களை கட்டுப்படுத்த இந்த காப்புரிமை கோரப்பட்டுள்ளது. இது மொபைல் உலகில் பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இது செயல்படும் முறையே வியக்க வைக்கும் அளவிற்கு இருக்கிறது.
மூளையில் நாம நினைப்பதன் மூலம் இனி மொபைலை இயக்க முடியும். போன் செய்வது தொடங்கி அனைத்திற்கும் மூளையில் நினைத்தால் போதும். இந்த 'மைண்ட் கண்ட்ரோல்' தொழில்நுடபத்திற்கு தற்போது மைக்ரோசாப்ட் காப்புரிமை வாங்கியுள்ளது.
இது 'எலக்ட்ரோ என்செபலோகிராம்' என்ற தொழில்நுட்பம் மூலம் செயல்படுகிறது. இது நமது மூளையில் ஏற்படும் மாற்றங்களை கவனமாக கருத்தில் கொள்ளும். அதை வைத்து நாம் என்ன நினைக்கிறோம் என்பதை கண்டுபிடித்து அனைத்து வேலைகளையும் எளிதாக செய்யும். இன்னும் சில மாதங்களில் இது நடைமுறைக்கு வரும்.
Microsoft patents for controlling application using mind technology. From this technology we can control any application using our mind. Just by thought we can change anything in the application.