ராஜமௌலியின் அடுத்த படத்தின் பட்ஜெட் இவ்வளவு கோடியா..??

2018-01-18 10,129

'பாகுபலி' படத்தின் மூலம் இந்திய சினிமாவை உலகளவில் எடுத்துச் சென்றவர் இயக்குனர் ராஜமௌலி. ராஜமௌலியின் 'பாகுபலி' இரண்டு பாகமும் சேர்த்து ரூ. 2500 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இப்படத்தையடுத்து இவர் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆரை வைத்து படம் இயக்கவுள்ளார். இப்படத்தின் மொத்த பட்ஜெட் 150 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.

'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களின் மூலம் இந்தியத் திரையுலகத்தில் மிகப் பெரும் வசூல் சாதனையைப் புரிந்தவர் இயக்குனர் ராஜமௌலி. இந்தி திரைப்படங்கள் மட்டும்தான் பெரிய அளவில் வசூலிக்க முடியும் என்றிருந்ததை முறியடித்து ஒரு தெலுங்குப் படத்தாலும் அப்படி ஒரு சாதனையைச் செய்ய முடியும் என்று பிராந்திய மொழித் திரையுலகங்களுக்குப் புரிய வைத்தார்.


Director Rajamouli has taken Indian cinema globally through 'Baahubali'. Rajamouli taking his next film with Ramcharan Teja and Jr NTR. This film's budget is over 150 crores.

Videos similaires