நடிகர் கமல்ஹாசனின் அரசியல் அறிவிப்பை முன்கூட்டியே எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இதைக் கேட்ட மக்களுக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சி. எம்ஜிஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தின் 2ம் பாகமாக தயாராகிறது, கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு. இது அனிமேஷன் திரைப்படமாக தயாரிக்கப்படுகிறது. இப்பட துவக்க விழாவில் இன்று ரஜினியும், கமலும் ஒன்றாக பங்கேற்றனர். இருவரும் கை குலுக்கிக் கொண்டனர். இரு நடிகர்களுமே, அரசியல் கட்சி துவங்க உள்ளதாக அறிவித்த நிலையிலும், ஒரே மேடையில் சந்தித்துக் கொண்டது முக்கியத்துவம் பெற்றது
இந்த நிலையில், நிருபர்களின் கேள்விக்கு ரஜினிகாந்த் பதிலளித்தார். அப்போது கமல் கட்சி துவங்வதாக அறிவித்துள்ளதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் ரஜினிகாந்த். அப்போது நிருபர்கள் அவரிடம், கமலின் அரசியல் அறிவிப்பை முன்கூட்டியே எதிர்பார்த்தீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு, ரஜினி அளித்த பதில்தான் ஆச்சரியமானது. கமல் அறிவிப்பு வெளியிடுவார் என்று முன்கூட்டியே எதிர்பார்க்கவில்லை, அவருக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார். அதாவது, கமல் அறிவிப்பு பற்றி தனக்கு எந்த தகவலும் முன்கூட்டியே தெரியாது என அவர் கூறியுள்ளார்.
Actor Rajinikanth says, he does not expect Kamal Haasan's political announcement. But Kamal Haasan had said long before that , Rajinikanth and I would do a healthy politics.