நடிகை வித்யா பாலன் குறித்து இயக்குனர் கமல் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

2018-01-17 1

நடிகை வித்யா பாலன் குறித்து இயக்குனர் கமல் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரபல கவிஞர் கமலா தாஸின் வாழ்க்கை வரலாற்றை மலையாளத்தில் ஆமி என்ற பெயரில் படமாக்கி வருகிறார் கமல். கமலா தாஸாக நடிக்க முதலில் பாலிவுட் நடிகை வித்யா பாலனை தான் ஒப்பந்தம் செய்தார்கள். படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே அவர் படத்தில் இருந்து விலகிவிட்டார். ஆமி படத்தில் இருந்து வித்யா பாலன் விலகியது நல்லதாக போச்சு. மஞ்சு வித்தியாசமாக நடித்துள்ளார். இதுவே வித்யா பாலன் நடித்திருந்தால் நடிப்பை விட கவர்ச்சி மேலோங்கியிருந்திருக்கும் என்றார் கமல். அது எப்படி வித்யா பாலன் நடித்தால் கவர்ச்சி அதிகமாகியிருக்கும் என்று இயக்குனர் கமல் கூறலாம் என்று சிலர் கிளம்பியுள்ளனர். கவர்ச்சி விஷயத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் கமல். ஆமி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது. அதில் மஞ்சு வாரியர் கமலா தாஸாக அருமையாக உள்ளார். நடிப்பு என்று வந்துவிட்டால் சூப்பர் ஸ்டார்களுக்கே சவாலாக இருப்பவர் மஞ்சு என்பது குறிப்பிடத்தக்கது. சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த வித்யா பாலன் அடுத்ததாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார்.

Malayalam director Kamal's remark about Bollywood actress Vidya Balan has not gone down well with many. He said that, 'Manju has done the role differently from what Vidya would have done. If Vidya had played the character, there would have been some sexuality'. Manju was roped in after Vidya opted out of Aami.

Videos similaires