ஜெ. மரணம் திவாகரனின் திடுக் தகவல்

2018-01-17 38,109

ஜெயலலிதா டிசம்பர் 4ம் தேதி மாலை 5.15 மணிக்கே உயிரிழந்துவிட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார். ஆனால் ஓராண்டுக்குப் பிறகு திவாகரன் ஏன் இந்த தகவலை தெரிவிக்கிறார் என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும் அறிவிப்பை தள்ளிப்போட யார் அனுமதி அளித்தது என்று பல்வேறு கேள்விகளை திவாகரனின் இந்த திடுக் தகவல் ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மரணமடைந்து சரியாக 407 நாட்கள் ஆகின்றன. ஆனால் அவர் மரணத்தில் இருக்கும் சந்தேகம் என்பது மட்டும் முற்றுபெறாமல் புதுப்புது மர்ம முடிச்சுகள் விழுந்து கொண்டு தான் இருக்கின்றன. ஜெயலலிதா உயிரிழந்தவிட்டதாக டிசம்பர் 5ம் தேதி அப்பலோ நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சசிகலாவின் சகோதரர் திவாகரன், ஜெயலலிதா ஆபத்தான நிலையில் இருக்கும் செய்தியறிந்து நான் அப்பலோ மருத்துவமனைக்கு சென்றேன். டிசம்பர் 4ம் தேதிமாலை 5.15 மணிக்கே ஜெயலலிதா இறந்துவிட்டார், ஆனால் வெறும் மெஷின்களை வைத்து அவரை வைத்திருந்தனர்.

அப்போதே ஏன் இப்படி இறந்தவரை மெஷின் பாதுகாப்பில் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, தமிழகம் முழுவதும் இருக்கும் அப்பலோ மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பு அளித்தால் மட்டுமே மரணத்தை அறிவிக்க முடியும் என்று அப்பலோ கூறியதாக திவாகரன் பேசியுள்ளார்.

Sasikala's brother Divakaran said that Jayalalithaa died at 5.15 pm on December 4.

Videos similaires