அரசியலுக்கு வரும் கமலுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

2018-01-17 29,526

ஆறு மாதத்தில் சட்டசபைத் தேர்தல் வந்தால் அதனை சந்திக்க தயார் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். புதிய கட்சி தொடங்க உள்ள கமலுக்கு வாழ்த்துக்கள் என்றும் ரஜினி வாழ்த்தியுள்ளார். தமிழ் சினிமாவில் நண்பர்களாக உள்ள ரஜினியும், கமலும் அரசியலில் குதிக்கப் போகிறார்கள். இவர்களின் அரசியல் பயணம் எதிர் எதிரானது. தான் அரசியலில் ஈடுபடுவேன் என்றும் ஆன்மீக அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் கூறியுள்ளார் ரஜினி. இதற்கு கமல் வாழ்த்தினார்.

பிப்ரவரி 21ஆம் தேதியன்று கட்சி பெயரை அறிவிப்பேன் என்றும் ராமநாதபுரத்தில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்குவேன் என்றும் நள்ளிரவில் ட்விட்டினார் கமல்ஹாசன். இந்த ட்விட்டர் தமிழக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.
கட்சி தொடங்க சில முன்னேற்பாடுகள் தேவை என்று கூறிய கமல்ஹாசன்,திடீரென கட்சி தொடங்கப்போவதாக நள்ளிரவில் கூறியது ஏன் என்று அரசியல் கட்சித்தலைவர்கள் கேள்வி எழுப்பினர். சிலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதனிடையே இன்று போயஸ் தோட்டத்தில் தனது வீட்டருகே செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறிய ரஜினி, புதிய கட்சி தொடங்க உள்ள கமலை வாழ்த்துவதாக கூறினார். இருவரும் இணைந்து செயல்படுவீர்களா என்று கேட்டதற்கு காலம்தான் பதில் சொல்லும் என்றார்.

Actor Rajinikanth has said that he is ready to face the Assembly elections and has greeted actor friend Kamal Haasan for his political entry.

Videos similaires