டெல்லியில் தொடரும் தமிழக மருத்துவ மாணவர்களின் உயிரிழப்புகள்

2018-01-17 3

படிப்பில் படு சுட்டியான திருப்பூர் மாணவர் சரத்பிரபு மெரிட்டில் இடம் கிடைத்து டெல்லி யூசிஎம்எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் படித்து வந்ததாகவும், நேற்று இரவு கூட குடும்பத்தாருடன் தொலைபேசியில் நல்ல முறையில் உரையாடிய மாணவன் காலையில் உயிரிழந்திருப்பதாக கூறப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சரத்பிரபுவின் உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையத்தை சேர்ந்த மாணவர் சரத்பிரபு யூசிஎஎம்எஸ் மருத்துவக்கல்லூரியில் இரண்டாமாண்டு எம்எஸ் பயின்று வருகிறார். இன்று காலையில் மாணவர் சரத்பிரபு எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரி விடுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கையில் இன்சுலின் போட்டுக்கொண்டு மாணவர் சரத் பிரபு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் சரத்பிரபு என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. சரத்பிரபு இறந்தது குறித்து அவருடைய பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் அவசரமாக டெல்லி விரைந்துள்ளனர்.

Thiruppur student Sarathprabhu's suicide creates doubts among the family members, as he is a merit student he would not commit suicide and yesterday night too he talked with the family members over phone.

Videos similaires