குஜராத் வருகை தரும் இஸ்ரேல் பிரதமருக்கு வரலாறு காணாத பலத்த பாதுகாப்பு

2018-01-17 1,075

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 6 நாள் பயணமாக இந்தியா வந்து இருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அவர் டெல்லி வந்து சேர்ந்தார். இவருடைய இந்த பயணம் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. முக்கியமாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் இந்த பயணம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. ஜெருசலேம் தான் இஸ்ரேலின் தலைநகர் என்ற அமெரிக்காவின் தீர்மானத்திற்கு எதிராக இந்தியா ஐநா சபையில் வாக்களித்து இருந்தது. இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமரின் இந்த வருகை மிகவும் முக்கியமாக உலக தலைவர்களால் கவனிக்கப்படுகிறது.

காலை பத்து மணிக்கு மோடியும், பெஞ்சமின் நெதன்யாகுவும் அஹமதாபாத் செல்ல இருக்கிறார்கள். அங்கு இருக்கும் விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் வரை இவர்கள் காரில் பயணிப்பார்கள். இந்த கார் மேற்பகுதி திறந்த வகையில் இருக்கும் என்பதால் அவர்கள் அனைத்தையும் பார்க்க முடியும்.

இவாங்கா டிரம்ப் இந்தியா வந்த போது எவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதோ அதே அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு இருக்கிறது. இவர்கள் பயணிக்க போகும் 8 கிலோ மீட்டர் தூரமும் தற்போது மக்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இருநாட்டு பிரதமருக்கும் வரவேற்பு அளிப்பதற்காக அனைத்து மாநிலங்களில் இருந்தும் மக்கள் கொண்டுவரப்பட்டு, வரிசையாக நிற்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

Israel Prime Minister Benjamin Netanyahu will visit to PM Modi's home state Gujarat today morning. They will round the state in open car for 8 Kms, Tight security arrangements made for his visit.

Videos similaires