இஸ்லாமியர்களுக்கான ஹஜ் புனித யாத்திரை மானியம் ரத்து

2018-01-16 11

ஹஜ் புனித யாத்திரை செல்வோருக்கு வழங்கப்படும் மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட மானியம் பெண்குழந்தைகளின் கல்விக்காக செலவிடப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

இஸ்லாமியர்களின் முக்கியமான 5 கடமைகளில் கடைசியானதாக இருப்பது ஹஜ் புனித பயணம் செல்வது. ஆண்டு தோறும் ஹஜ் பயணம் செல்ல மத்திய அரசின் மானியத்துடன் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களுக்காக மத்திய அரசு குறிப்பிட்ட தொகையை மானியமாக அளித்து வருகிறது. சிறுபான்மை நலத்துறையின் சார்பில் ஹஜ் பயணிகளுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பு ஆண்டில் 1.75 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டில் ரூ. 450 கோடி ஹஜ் பயணத்திற்கு மானியமாக அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ஹஜ் பயணிகளுக்கு அளித்து வந்த மானியம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

Centre cancels the Haj subsidy and also said the subsidy spent for Haj is diverted to girl cchildren education development. This year nearly 1.5 lakh muslims applied to go for Haj.

Videos similaires