பிரபாஸ் பாகுபலி படத்தில் நடிக்க மறுத்த விஷயம் தெரிய வந்துள்ளது.
பாகுபலி, பாகுபலி 2 படங்கள் மூலம் உலக அளவில் பிரபலமாகியுள்ளார் பிரபாஸ். தெலுங்கு நடிகரான அவருக்கு தற்போது இந்தியா முழுவதும் மார்க்கெட் உள்ளது.
அவரை இந்தி படங்களில் நடிக்க வைக்க பாலிவுட் இயக்குனர்கள் ஆர்வமாக உள்ளனர்.
பாகுபலி படத்தில் அப்பா, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் ராஜமவுலி பிரபாஸிடம் கூறியபோது இந்த வாய்ப்பு வேண்டாம் என்று தெரிவித்தாராம். தொடர்ந்து 4 படங்கள் தோல்வி அடைந்த நிலையில் பாகுபலி வாய்ப்பு வந்தபோது அதை ஏற்க மறுத்தேன். என்னிடம் ஏதோ குறை இருக்கிறது என்று நினைத்தேன். ஒரு படத்தை தேர்வு செய்வதற்கு முன்பு 2 முறை யோசிக்க வேண்டும் என்ற மனநிலையில் இருந்தேன் என்றார் பிரபாஸ். பிரபாஸ் மறுத்தபோதிலும் ராஜமவுலி அவரை விடுவதாக இல்லை. பேசிப் பேசியே பிரபாஸின் மனதை மாற்றி பாகுபலி படத்தில் நடிக்க வைத்துவிட்டார். பிரபாஸுக்கு தனது வாழ்நாளில் மறக்க முடியாத படமாக அமைந்துவிட்டது பாகுபலி. தான் பெரிய படத்தை எடுக்கிறோம். அது நிச்சயம் ஹிட்டாகும் என்பது ராஜமவுலிக்கு தெரியும். ஆனால் படத்திற்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை என்று பிரபாஸ் கூறினார்.