சுயேட்சையான தினகரன் கருத்துக்கெல்லாம் பதில் கூற முடியாது என்றும் அவரை அதிமுக பொருட்டாகவே நினைக்காத போது ஊடகங்கள் தான் அவருக்கு முக்கியதுவம் வழங்கி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓமலூரில் நடைபெற்ற நிகழ்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிகர் கமலஹாசன் கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு இது ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்றார். மேலும் இந்நாட்டில் பல கட்சிகள் பல இயங்கள் தொடங்கப்பட்டாலும் ஒருசில கட்சிகளும் இயங்களும் தான் நிலைத்து நிற்கின்றன என்றதுடன் அதில் அதிமுகவும் ஒன்று என்றார். பின்னர் டிடிவி தினகரன் குறித்த கேள்விக்கு தினகரன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் என்றும் தற்போது அவர் சுயேட்சை என்றும் அவரை குறித்த கேள்விகளுக்கு எல்லாம் கருத்து கூற முடியாது என்றவர் தினகரனுக்கு ஊடகங்கள் தான் முக்கியவம் கொடுத்து வருவதாக கூறினார்.
Chief Minister Ettappi Palanisamy said that the Independent daily Dinakaran could not answer the question and the media did not think it was important for him.