தினகரன் தனிக்கட்சி தொடங்க என்ன காரணம் ? பரபரப்பு பின்னணி தகவல்கள்

2018-01-16 10

தனிக்கட்சி தொடங்குவது குறித்து நாளை எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் முடிவு எடுக்கப்படும் என்று சுயேச்சை எம்எல்ஏ டிடிவி தினகரன் புதுச்சேரியில் பேட்டியளித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். ஆனால், இதுபோன்ற முடிவுக்கு அவர் செல்வார் என்பதை சில நாட்களுக்கு முன்பே உங்கள் 'ஒன்இந்தியாதமிழ்' செய்தியாக வெளியிட்டிருந்தது. தினகரன் முடிவுக்கு காரணம் உள்ளாட்சி தேர்தல்தான் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இரட்டை இலையை பெற்ற கையோடு உற்சாகத்தில் உள்ள எடப்பாடி, பன்னீர் செல்வத்தின் அடுத்த இலக்கு உள்ளாட்சி தேர்தல்தான். தங்களுக்கு சாதகமாகத்தான், மேயரை மக்களே தேர்ந்தெடுக்கும் வகையில் விதிமுறையில் திருத்தம் கொண்டுவந்துள்ளனர். இதனால் திமுக தரப்புக்கு சற்று கலக்கம்தான்.

இந்த நிலையில் தினகரனுக்கு அதிகபட்சம் 8 சதவீதம் வாக்குகள்தான் உள்ளாட்சியில் கிடைக்கும் என எடப்பாடி தரப்பு கணக்கு போட்டுள்ளது. அதோடு, தினகரன் என்ற பிம்பத்தின் மீது திடீரென உருவான மாயை மக்களிடமிருந்து விலகிவிடும் என்று நினைக்கிறது அந்த தரப்பு. இதற்கு முக்கிய காரணம், தினகரனுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சின்னம் கிடையாது என்பதுதான்.

Independent MLA TTV Dinakaran said that own party decision will be taken tomorrow. Dinakaran's decision is because the local elections, says who are close to him.