சீதக்காதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் சேதுபதியின் பிறந்தநாள் அன்று வெளியாகியுள்ளது.
கோலிவுட்டின் பிசியான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. அவர் கை நிறைய படங்கள் வைத்து நடித்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கெட்டப்புகளில் வருகிறார்.
இந்நிலையில் சீதக்காதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் சீதக்காதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் வயதானவராக வித்தியாசமாக உள்ளார் விஜய் சேதுபதி.
சீதக்காதி போஸ்டரில் இருப்பது விஜய் சேதுபதி தானா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு வித்தியாசமாக உள்ளார். போஸ்டரை பார்த்த ரசிகர்கள் விஜய் சேதுபதியை பாராட்டி வருகிறார்கள்.
விஜய் சேதுபதியின் பிறந்தநாளையொட்டி அவருக்கும், ரசிகர்களுக்கும் பரிசளிக்கும் விதமாக நள்ளிரவு 12 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் சேதுபதி.