நயன்தாரா போடும் 2 கன்டிஷன்களை கேட்டு இயக்குனர்களுக்கு ஒரு நிமிஷம் தலை சுத்துகிறதாம். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறார். மார்க்கெட் ஏற ஏற அவர் புதிது புதிதான கன்டிஷன் போடுகிறாராம். அவரது கன்டிஷன்களை கேட்டு இயக்குனர்களுக்கு ஒரு நிமிஷம் தலை சுத்துகிறதாம்
ஹீரோயின்களுக்கு அதாவது தன்னை சுற்றியே கதை நகரும் படங்களாக பார்த்து பார்த்து தேர்வு செய்து நடிக்கிறார் நயன்தாரா. அந்த படங்கள் ஹிட்டாவதால் தொடர்ந்து அது மாதிரியான படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
ஹீரோக்களை பார்த்து சிரித்து, மரத்தை சுற்றி சுற்றி வந்து டான்ஸ் ஆடும் கதாபாத்திரத்தில் நடிக்க மறுக்கிறாராம் நயன்தாரா. இனி கிளாமராக நடிக்கவும் மாட்டேன் என்கிறாராம்.
கிளாமராக நடிக்க மாட்டேன், ஹீரோக்களுடன் ரொமான்ஸ் பண்ண மாட்டேன். இந்த இரண்டு கன்டிஷன் ஓகே என்றால் நடிக்கிறேன் என தன்னை தேடி வரும் இயக்குனர்களிடம் கூறுகிறாராம் நயன்தாரா.
ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்த ஜெய் சிம்ஹா படத்தில் நயன்தாராவுக்கு ஹீரோவை காதலிக்கும் கதாபாத்திரம் தான். அது ரவிக்குமாருக்காக ஒரு முறை கொள்கையை தளர்த்திக் கொண்டாராம்.
Nayanthara is reportedly puttingforth two conditions to sign a movie. Directors are stunned by her conditions. She has decided to stop being a glam doll anymore.