ரஜினியின் ஆன்மீக அரசியலின் பின்னணியை பட்டவர்த்தனமாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி போட்டுடைத்திருப்பதுதான் அரசியல் அரங்கத்தில் ஹாட் டாபிக். கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்தை திராவிட கட்சிகளின் நீட்சியாகவே பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினிகாந்தின் 'ஆன்மீக அரசியல்' இந்துத்துவா அரசியலாகப் பார்க்கப்பட்டது. ரஜினிகாந்த் தமது ஆன்மீக அரசியல் மீது நேர்மை, தூய்மை என போர்வை போர்த்திப் பார்த்தார். ஆனால் ராமகிருஷ்ணா மடத்துக்கு முதலில் சென்றபோதே அவர் முன்வைக்கும் ஆன்மீக அரசியல் இந்துத்துவா அரசியல்தா என்பது அப்பட்டமானது.
அதன்பின்னரும் ஆன்மீகம், அரசியல், ஆன்மா குறித்து 'தத்துவ' விளக்கம் தந்து வருகிறார் ரஜினிகாந்த். ஆனால் ரஜினிகாந்தை களமிறக்கி அவருடன் பாஜக கைகோர்க்க முயற்சிக்கிறது என்பதுதான் அரசியல் அரங்கத்தின் பேசுபொருளாக இருந்தது.
எந்த ஒரு அரசியலும் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படாத நிலையில் அதன் இருப்பு என்பது கேள்விக்குள்ளாக்கப்படும். திராவிட அரசியல் என்னதான் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தாலும் வலிமை மிக்கதாக இல்லை என்பதை நாடறியும்.
திராவிட அரசியலின் ஒற்றை முகமாக பார்க்கப்படும் திமுக தலைவர் கருணாநிதி முதுமையால் உடல்நலம் குன்றியிருக்கிறார். மறுபக்கம் இன்னொரு திராவிட அரசியல் கட்சியான அதிமுகவை வழிநடத்திய ஜெயலலிதா உயிருடன் இல்லை. இப்போது அதிமுக என்பது பாஜகவாகவே மாறிக் கொண்டிருக்கிறது.
Thuglak Editor S Gurumurthy said that if BJP and Rajinikanth join they will defeat the Dravidian politics in TamilNadu.