வங்கியில் பணியாற்றுவோரையோ அல்லது குடும்பத்தில் யாரேனும் வங்கிப் பணியில் இருந்தாலோ அவர்களுடன் திருமணம் ஒப்பந்தம் செய்யக் கூடாது என்று கொலகத்தாவில் இஸ்லாமிய மதகுரு ஃபட்வா கொடுத்துள்ளார். இதற்கு வங்கி ஊழியர்கள் அமைப்பு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர். தரூர் உலூம் தியோபந்த் என்ற மதகுரு அண்மையில் இஸ்லாமியர்களுக்கு ஃபட்வா ஒன்றை கொடுத்துள்ளார். அதில் வங்கிப் பணியின் மூலம் பணம் சம்பாதிக்கும் நபர் மற்றும் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் வங்கிப் பணியில் இருந்தால் அவர்களுடன் திருமண பந்தம் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. வங்கியில் அதிக வட்டி வசூலிக்கப்படுவதால் அதில் இருந்தே இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது என்பதால் இந்த ஃபட்வா கொடுக்கப்பட்டுள்ளது. வங்கிப் பணியாளர்களைத் தவிர்த்து தயாள குணம் படைத்த குடும்பத்தை சேர்ந்தவர்களுடன் திருமண பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் என்று அந்த மதகுரு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த ஃபட்வா குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் அப்துல் சயீத் கான், "இது போன்ற ஃபட்வா கொடுப்பவர்கள் நிஜ வாழ்க்கையை விட்டு எவ்வளவு தூரம் தள்ளி இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. போதுமான படிப்பறிவில்லாத, ஏழை இஸ்லாமிய மக்களை குறி வைத்தே இதுபோன்ற அறிவிப்புகள் கொடுக்கப்படுவதாக" தெரிவித்தார்.
Bank unions in Kolkatta is against over Fatwa issued against marrying bank employees or in a family those who were working in banks instead making marriage proposals with them look for a ‘pious’ families the fatwa further says.