கணக்கில் வராத 4500 கோடி ரூபாய், ஐடி ரெய்டில் சிக்கியது- வீடியோ

2018-01-13 5,794

சசிகலாவின் உறவினர்கள் வீடு, நிறுவனங்களில் நடந்த சோதனையில் ரூ.4,500 கோடி கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வருமான வரி புலனாய்வுப் பிரிவு இயக்குநர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதத்தில் சசிகலா குடும்பத்தையே புரட்டிப் போட்டது ஆபரேஷன் கிளின் மணிக்காக நடத்தப்பட்ட மெகா ரெய்டு. சுமார் 5 நாட்களை அதிகாரிகள் இரவு பகல் பாராமல் சசிகலா உறவினர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டினர். ஆவணங்கள் ஒவ்வொன்றாக தோண்டித் துருவியதோடு, விசாரணைக்கு ஆஜராகுமாறு சசிகலாவின் நெருங்கிய உறவினர்கள் சம்மனும் அனுப்பப்பட்டது.

இந்த ரெய்டில் வருமான வரிஅதிகாரிகளின் கவனம் முழுக்க இருந்தது இளவரசியின் வாரிசுகள் மீதே. விவேக், கிருஷ்ணப்ரியா இருவரும் தான் போலி நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொள்வதாக மத்திய கம்பெனி விவகாரங்கள் துறை அளித்த தகவலின் அடிப்படையில் இவர்களிடம் தோண்டித் துருவியது வருமான வரித்துறை. இந்நிலையில் இந்த வருமான வரி சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் தற்பொது வெளிவரத் தொடங்கியுள்ளன.

Tamilnadu Income tax investigation wing Director says that nearly Rs.4,500 crores unaccounted assets would be identified in the Mega raid of Sasikala family network.

Free Traffic Exchange

Videos similaires