சமத்துவ பொங்கல் கொண்டாடிய ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின்- வீடியோ

2018-01-13 9

காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் பங்கேற்று சிறப்பித்தார். தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை ஏற்பாடுகள் களைகட்டியுள்ளன. திமுகவினர் சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. ஆதனூரில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்க வந்த ஸ்டாலினுக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஸ்டாலினுக்கும் துர்கா ஸ்டாலினுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் என களைகட்டியது பொங்கல் விழா. ஆட்டம் பாட்டம் என அமர்களப்பட்டது சமத்துவ பொங்கல்.
திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல் வைத்து விழாவை தொடங்கி வைத்தனர். பொங்கல் பொங்கும் போது திமுகவினர் உற்சாக முழக்கமிட்டனர். பொங்கல் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார் ஸ்டாலின்.

DMK working president MK Stalin celebrated Samathuva Pongal with his wife and cadres in Aathanur village in Kanchipuram district.