பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு அவனியாபுரம் ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்
பொங்கல் பண்டிகை என்றாலே மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டும் வரும் 14, 15, 16ம் தேதிகளில் கோலாகலமாக அவனியாபுரம் பாலமேடு பகுதில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது .இந்த வருடம் நடக்கும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை மாடுபிடி வீரர்கள் துன்புறுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்குகள் நலவாரியம் அறிவுறுத்தியுள்ளது .இதனையொட்டிஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ள மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு , அவனியாபுரம் ஆகிய ஊர்களில் வாடிவாசல், பார்வையாளர் அமரும் இடம், காளைகள் நிறுத்தப்படும் இடம் உள்ளிடவைகள் அமைக்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்த மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ்ராவ் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகள் அரசின் சட்ட திட்டத்திற்க்குட்பட்டு, முறையாக நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் மதுரை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்வதாக தெரிவித்தார்
பைட்
மேலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் வயது, உயரம் உள்ளிட்டவைகள், மாடுபிடி வீரர்களின் வயது, ஆகியவை மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவித்தார்.
Des : District Collector examined the Jallikattu tournament arrangements held in Alanganallur, Palamadu and Avanipuram in Madurai district at Pongal festival