கனிமொழிக்கு வலுக்கும் எதிர்ப்பு- வீடியோ

2018-01-12 370


நாத்தீக மாநாட்டில் பேசிய திமுக எம்பி கனிமொழி திருப்பதி கோயில் உண்டிலை பாதுகாத்து கொள்ள முடியாத பெருமாள் மக்களை எப்படி காப்பார் என்று பேசியதற்கு கண்டனம் தெரிவித்து ராயலசீமா போராட்ட சமீதியினர் உருவ பொம்மைகளை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் திருச்சியில் திடாவிட கழகம் சார்பில் நாத்தீக மாநாடு நடைபெற்றது. அதில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். திமுக சார்பில் எம்பி கனிமொழி கலந்து கொண்டு பேசினார். அப்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணம் உள்ளவர்களுக்கு விரைவாகவும் ஏழை எளிய மக்கள் 20 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை உள்ளது என்றும், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியலை பாதுகாத்து கொள்ள கடவுள் உள்ளார் என்ற நம்பிக்கை இல்லாமல் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நியமிக்கப்படும் நிலையில், தனக்கு உண்டானதையே பாதுகாத்து கொள்ள முடியாத பெருமாள் எப்படி மக்களை காப்பாற்றுவார் என்று பேசினார். கனிமொழியின் இப்பேச்சு இந்து மக்களை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்று கூறி ஆந்திராவை சேர்ந்த ராயலசீமா போராட்ட சமீதி தலைவர் நவீன்குமார் ரெட்டி தலைமையில் ஏராளமான தொண்டர்கள் கனிமொழியின் உருவ படத்தை எரித்து போராட்டம் நடத்தினர். திமுக எம்பி கனிமொழி மண்ணிப்பு கோரும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Videos similaires