மத்திய அரசு கொண்டு வந்த ஆதார் அடையாள அட்டை அரசின் நலத்திட்ட உதவிகளுக்கும் வங்கி பணபரிவர்தனைசெய்யவும் வாகனங்கள் வாங்கவும் இறப்பு சான்றிதழ்கள் வாங்கவும் கட்டாயம் ஆக்கப்பட்டது .இந்த ஆதார் அட்டை இப்போது காளைகளை அடக்கவும் அவசியமாக்கப்பட்டுள்ளது
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அலங்கா நெல்லூர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுபோட்டிகளில் கலந்து கொள்ளும் மாடுகளின் புகை படத்துடன் அதன் உரிமையார் தனது ஆதார் அடையாள அட்டையுடன் சமர்ப்பித்து பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது .அதன்படி இன்று காளை மாடுகளின் உரிமையாளர்கள் தங்களது மாடுகளின் புகை படத்துடன் பதிவு செய்து கொண்டனர் .இதனிடையே காளைகளை அடக்க வரும் ஜல்லிக்கட்டு மாடு பிடி வீரர்களும் தங்களது ஆதார் அட்டையுடன் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது விலங்குகள் நல வாரியம் .ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்க வீரம் போதாதா என்றும் இதற்குமா ஆதார் எண் தேவை என்று மாடுபிடி வீரர்கள் மத்திய அரசை விமர்சனம் செய்தனர்
Des : The Aadhaar ID card issued by the Central Government has been made mandatory for the state's welfare assistance, banking, purchase of mortgages and death certificates. This Aadhaar card is now mandatory to suppress the bulls