கல்விக்காக மிக ஆபத்தான பாதையில் செல்லும் சிறுவர்கள்- வீடியோ

2018-01-12 15

பள்ளி செல்லும் குழந்தை இருந்தாலே வீடு பயங்கர கலேபரமாய் இருக்கும். காலையில் பள்ளி கிளம்பும் நிறத்தில் வீடே தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்டு பள்ளிக்கு கிளம்புவார்கள். அதுவும் சேர்ந்த செல்ல கூட்டணியிருந்தால் அவர்களின் சண்டையைப் பற்றி சொல்லவே வேண்டாம். காலையில் எழுப்புவதிலிருந்து அவர்களை தயார் செய்து, காலை உணவை சாப்பிட வைத்து, பேக் மற்றும் லன்ச் பேக் செய்து கொடுத்து ஸ்கூல் வேன் அல்லது ஆட்டோவில் சென்று ஏற்றிவிடுவதற்குள் போதும் போதும் என்றாகிடும். இங்கே சில குழந்தைகளும் பள்ளிக்குச் செல்கிறார்கள், பள்ளிக்கு செல்லும் வழியில் அவர்கள் சந்திக்கிற சில சாகசங்களை நீங்களே பாருங்கள். நாமெல்லாம் ட்ரக்கிங் என்று எப்போதாவது செல்லும் வழியைத் தான் இவர்கள் தினமும் பள்ளிக்குச் செல்லவும் திரும்பவும் பயன்படுத்துகிறார்கள். சீனாவின் குலு என்ற ஊரில் இருக்கக்கூடிய இந்த பள்ளி தான், உலகிலேயே மிகவும் ஆபத்தான இடத்தில் அமைந்திருக்கக்கூடிய பள்ளி என்று சொல்லப்படுகிறது. மலையின் பக்கவாட்டில் ஒரு அடி அகலம் மட்டுமே வழித்தடம் இருக்கும். கொஞ்சம் கால் இடறினாலும் அதளபாதாளத்திற்கு செல்ல வேண்டியது தான். இப்படியே ஒன்றல்ல இரண்டல்ல ஐந்து மணி நேரம் பயணம் செய்யவேண்டும். சில நேரங்களில் குதிரையில் கூட பயணிக்கிறார்கள். இந்தப் பள்ளிக்கூடமும் சைனாவில் தான் இருக்கிறது. ஹாங் ஜியவான் என்னும் கிராமத்திலிருந்து மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் என்றால் அங்கே ஓர் மலையை கடக்க வேண்டும். இவர்கள் சற்று ஆசுவாசப்படும் படி ஒரு ஐடியாவை கண்டுபிடித்திருக்கிறார்கள். மலையை குடைத்து மேலே ஏறுவதற்காக ஆங்காங்கே ஏணிப்படிகளை வைத்திருக்கிறார்கள். பாதுகாப்பு என்றால் என்ன என்று கேட்கும் அளவில் இருக்கிறது அதில் தான் தினமும் குழந்தைகள் சென்று வருகிறார்கள். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்களுடைய கல்வியை விட்டுத்தரமாட்டார்கள் என்பதற்கு இந்தப் படம் சிறந்த உதாரணம். இந்தோனேசியாவில் இருக்கும் லெபாக் என்ற ஊரில் தான் இந்தப் பாலம் இருக்கிறது. கிராமத்தில் இருக்கக்கூடிய சிறுவர் சிறுமியர்கள், பள்ளிக்கூடத்திற்கு சென்றாக வேண்டும் என்றால் இந்த ஆற்றை கடந்தாக வேண்டும். இந்த ஆற்றை கடக்க ஒரே வழி இப்படி உடைந்து தொங்கிக் கொண்டிருக்கும் இந்த பாலம் மட்டுமே. கொலும்பியாவில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றுவர இப்படி ஸ்டீல் கேபிளில் பிடித்து தொங்கியபடி 800மீட்டர் வரை பயணிக்கிறார்கள். ரியோ நீக்ரோ ஆற்றிலிருந்து 400 மீட்டர் உயரம் இது. இந்த புகைப்படம் டெல்லியில் எடுக்கப்படிருக்கிறது. குதிரை வண்டியில் பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கும் வருங்கால இந்தியாவின் தூண்கள்.

Children from different part of the world, have been travelling in odd ways and dangerous paths to get to school. Here are few of the places where children take up this dangerous journey to school.

Videos similaires