பி. வி. சிந்து சூர்யா, அஜித் குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படம் வைரல் ஆகின்றன.

2018-01-12 3,658

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து அஜீத் மற்றும் சூர்யா குடும்பத்தாருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ப்ரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டிகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகனுக்கு சொந்தமான சென்னை ஸ்மாஷர்ஸ் அணி சார்பில் விளையாடி வருகிறார் பி.வி. சிந்து. ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையை தோற்கடித்தார். பி.பி.எல். போட்டிகளில் சிந்து சுமீத் ரெட்டியுடன் சேர்ந்து கலப்பு இரட்டையர் பிரிவில் உலக அளவில் சிறந்து விளங்கும் கமிலா மற்றும் லீயை தோற்கடித்தார். அஜீத், ஷாலினி மற்றும் அவர்களின் மகள் அனோஷ்காவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் பி.வி. சிந்து. சூர்யா, ஜோதிகா, அவர்களின் மகள் தியா, மகன் தேவ் ஆகியோரும் சிந்துவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர். சூப்பர்ஸ்டார்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதாக ட்வீட்டியுள்ளார் சிந்து.


Famous Badminton player P. V. Sindhu met with actor Suriya and Ajith. She recently posted a picture of her with ajith, shalini and their daughter anoushka. She also posted a picture of her along with Suriya, Jyothika, Theor son and daughter dia and dev. This picture has gone viral on social media today.