சென்னையில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும் என தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மாசுகட்டுபாடு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பண்டைய காலத்தில் இயற்கை பொருட்களினால் தயாரிக்கப்பட்ட பொருட்களை தீயிட்டு கொளுத்தி போகி பண்டிகை கொண்டாடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர், டயர் உள்ளிட்ட பொருட்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போகி தினத்தன்று எரிக்கப்படும் பொருட்களால், புகை மண்டலம் ஏற்பட்டு விபத்துக்கள் நடைபெறுவதாகவும், தமிழ்நாடு மாசுகட்டுபாடு வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக நடைபெறும் விழிப்புணர்வு பிரசாரங்களால், டயர் போன்ற பொருட்களை எரிப்பது குறைந்துள்ளதாக கூறியுள்ள மாசுகட்டுபாடு வாரியம், இந்த ஆண்டு புகையில்லா போகி கொண்டாட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
Tamil Nadu Pollution Control Board Ordered to Festival Emphasis Smokeless Bhgoie