புதுவருடம் பிறந்ததிலிருந்து ஏன் அதற்கு முன்பிருந்தே பல பிரச்சனைகள் நம்மை திண்டாட வைத்துக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் 2ஜி முடிவுகள், ஆர்.கே நகர் இடைத்தேர்தல், ரஜினியின் அரசியல் பிரவேசம்,ஒகி புயல் ,மீனவ மக்களின் இழப்பு, என்று 2018 பெரும் சோகத்துடனே வரவேற்க முடிந்தது. சரி புத்தாண்டிற்கு பிறகாவது சீராகிடும் என்று நினைத்தால் நிலைமை எங்கோ சென்று கொண்டிருக்கிறது. 2017 ஜனவரியில் எழுச்சியுடன் மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்துடன் துவங்கியது. ஆனால் 2018 ஜனவரியிலும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இம்முறை ஜல்லிக்கட்டிற்காக அல்ல போக்குவரத்திற்காக, ஆம், அரசு பேருந்து ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தற்காலி ஓட்டுநர்களை வைத்து திகில் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள் அரசாங்க அதிகாரிகள்.
ஒவ்வொரு நாளிலும் புதிது புதிதாக எதாவதொரு சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதே நேரத்தில் அவை குறித்தும் அவற்றின் பின்னணி குறித்தும் பல்வேறு விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சம்பவம் குறித்தோ அல்லது அதன் பின்னணி குறித்து நாமும் விவாதித்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் இவற்றில் எதுவும் தனக்கு தொடர்பில்லை என்று ஒரு மனிதன் இந்த சமூகத்தில் வாழ்ந்திட முடியுமா? எவ்வித கவலையும் இல்லாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த சிலரில் ஒருவரை இங்கே பாருங்கள்.
Different Looks Of Nithyanandha