2ஜி வழக்கில் என்ன நடந்தது என்பதை 15 மாதங்கள் சிறையில் இருந்த போது ஆ. ராசா புத்தகமாக எழுதினார். "2G Saga Unfolds" என்கிற தலைப்பிலான இப்புத்தகம் வரும் 20ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்த புத்தகத்தில் பல்வேறு வெளிவராத தகவல்களை ராசா எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆங்கில ஊடகங்கள் சிலவற்றில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உங்கள் முயற்சியில் எந்த தவறும் இல்லை என்று மன்மோகன்சிங் தெரிவித்தார். உங்கள் அனைத்து நடவடிக்கையும் சட்டப்படி நியாயப்படுத்தத்தக்கது என்று மன்மோகன்சிங் கூறியிருந்தார். மன்மோகன்சிங் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின்போது, தடுக்காதது மட்டுமல்ல, ஆதரவாகவும் இருந்தார். தேசத்தின் கூட்டு மனசாட்சிக்காக, மன்மோகன்சிங்கும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் அமைதி காத்தது. தலைமை கணக்கு தணிக்கை துறையின் தலைவராக இருந்த வினோத் ராயால், அந்த அமைப்பின் நம்பகத்தன்மை சமரசம் செய்யப்பட்டது.
DMK leader A Raja, who was a telecom minister in the UPA government, was acquitted in the 2G spectrum case.