மரணம் தந்த வலியை யாராலும் மறக்க முடியாது. மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்தவர்களுக்கு வாழ்க்கை குறித்த ஓர் புரிதல் உண்டாகியிருக்கும். என் ப்ரியங்களின் தோழியாய் ஜனித்தவள், இன்று என் காதலியாய், மனைவியாய், தாயாய் இருக்கிறாள். நல்ல மனைவி அமைவது வரம் என்று சொல்பவர்களிடையே என் மனைவி எனக்கு அம்மா என்று சொல்வதில் எனக்கு எந்த உறுத்தலும் கிடையாது. எத்தனை கோடி புண்ணியங்களை சேமித்தேன் என்று தெரியாது. ஆனால் அத்தனைக்கும் முத்தாய்ப்பாக இன்று மனைவியானவள் அமைந்திருக்கிறாள். வாழ்க்கை குறித்த திட்டமிடல்கள் எல்லாருக்கும் பல விதங்களில் இருக்கும். எனக்கும் அப்படித்தான், காதலித்து திருமணம் செய்ய வேண்டும், எனக்குச் சமமாக படித்து வேலை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். என் நண்பர்களின் மனைவிமார்களைப் போலவே அவளும் நவ நாகரிக பெண்ணொருத்தியாக இருக்க வேண்டும் என்று நினைத்து கனவு கண்டேன். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் என் விருப்பம் : வேலைக்குச் செல்லும் போது எல்லா ஹிந்தி வகுப்பிற்கும் சென்று வந்தேன். அங்கே பயிற்சிக்கு வந்த பெண்ணொருத்தியை சந்தித்து நண்பர்களாக பழகினோம். நான் நினைத்த மாதிரியே நன்றாக படித்து வேலைக்கும் சென்று கொண்டிருந்தாள், குடும்பத்தின் பொறுப்பை இவள் ஒருத்தியே தாங்கிக் கொண்டிருந்தாள். அவளது ஒவ்வொரு செயல்களிலும் அவ்வளவு நேர்த்தி, எனக்கு மிகவும் பிடித்துப் போக ஒரு நாள் என் விருப்பத்தைச் சொன்னேன். திருமணம் எப்போ : யோசித்துச் சொல்வதாக சொல்லிவிட்டாள்.ஆனால் அவள் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை வழக்கம் போல பேசினாள் சிரித்தாள், சேர்ந்து டீ குடிக்க அழைத்துச் சென்றாள். ஒரு வாரம் சென்றது, எனக்கு ஏதோ அவள் என்னிடம் சற்று அதிகமாக உரிமை எடுத்துக் கொள்வது போலத் தோன்றியது. உண்மையிலேயே அப்படித்தானா அல்லது அது என் கற்பனையா என்று அப்போது எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. மூன்று மாத இடைவேளிக்குப் பிறகு மீண்டும் அவளிடம் கேட்டேன். நான் உனக்கானவள் அல்ல : இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை என்றாள். ஒரு கணம் திக்கென்றது. இவ்வள நாட்கள் என்னுடன் ஆசையாய் பழகி விட்டு இப்படி ஏமாற்றுகிறாள், காதலிப்பதாய் தானே இத்தனை நாட்கள் நினைத்திருந்தோம் ஆனால் இப்போது விருப்பமில்லை என்கிறாளே என்று கோபம் கோபமாய் வந்தது. காரணத்தை கேட்டேன். முதலில் மறுத்தவள் நான் வற்புறுத்திக் கேட்டதும் நான் உனக்கானவள் அல்ல என்று சொன்னாள்.
Man share his Love after his marriage