நாப்கினுக்கு ஜிஎஸ்டி வரி வசூலை நீக்கவும், இலவசமாக நாப்கினை வழங்க வலியுறுத்தியும், பிரதமர் மோடிக்கு ஆயிரம் நாப்கின்களை அனுப்ப பெண்கள் திட்டமிட்டுள்ளனர் ஜிஎஸ்டியில் சொகுசு பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்ட நாப்கினுக்கு 12 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது. பெண்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவைப்படும் நாப்கின்களை நியாயப்படி இலவசமாக வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பெண்களின் நலனில் அக்கறைக்கொண்ட அரசு தான் மேம்படும் என்று போர்க்கொடி உயர்த்தியுள்ள சமூகநல அமைப்புகள், நாப்கின்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் அரசு சார்பாக பல இலவச பொருட்கள் அளித்து வரும் நிலையில் பெண்களின் நலனுக்காக நாப்கின்களை இலவசமாக அளிக்கவேண்டும் என்று கோரிக்கையும் பலமாக ஒலித்து வருகிறது. கருத்தடுப்பு சாதனங்களும், ஆணுறைகளும் இலவசமாக வழங்கப்படும் போது ஏன் நாப்கின்களை இலவசமாக அளிக்க கூடாது என என்று மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமூக அமைப்பு ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சமூகநல அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்களும், மாணவிகளும் நாப்கினுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் களமிறங்கியுள்ளனர். இதனை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் போல நடத்தி வரும் அவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இதுதொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
Demanding GST free for napkins, Girls plan to send 1000 napkins to Modi. Social workers from Madhya Pradesh initiated this signature movement among girls to send the napkins to Modi.