சென்னைக்கு சுற்றுலா வந்த இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு- வீடியோ

2018-01-10 5

திருவல்லிக்கேணியில் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். பெரும்பாலான வெளிநாட்டினர் தமிழகத்தில் உள்ள கோவில்களை சுற்றிப்பார்க்கவும் படிப்புக்காகவும் சென்னைக்கு வருகின்றனர். சென்னையில் பன்னாட்டு விமான நிலையம் உள்ளதால் தமிழகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் சென்னைக்கே வருகின்றனர்.

இந்நிலையில் பின்லாந்து நாட்டை சேர்ந்த பாலோம்கி என்ற இளைஞரும் ஹீலா என்ற 23 வயது இளம்பெண்ணும் கடந்த வாரம் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தனர்.
காதலர்களான இவர்கள் டெல்லியை சுற்றிப்பார்த்த நிலையில் நேற்று சென்னைக்கு வந்தனர். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதியில் இவர்கள் தங்கியிருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை காதலன் பாலோம்கி விடுதியில் இருந்து தனியாக தப்ப முயன்றார். இதனை கவனித்த விடுதி ஊழியர்கள் அவரை பிடித்த கையோடு அறைக்கு சென்று பார்த்தனர்.

Videos similaires