கவர்ச்சிகரமானது என நினைத்துக் கொண்டு சென்னை கால்டாக்சி நிறுவனம் ஒன்று வெளியிட்ட விளம்பரம் பெரும் சர்ச்சையாகிவிட்டது. அந்த கால்டாக்சி நிறுவனத்துக்கு பாஜகவினர் பெயரால் மிரட்டல் விடப்பட்டது குறித்து போலீசிலும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது, சென்னையை சேர்ந்த கால் டாக்சி நிறுவனம் ஷட் அப் பண்ணுங்க, திமிரு போன்ற சமூக வலைதளங்களில் அதிகரம் பயன்படுத்தும் வாசகங்களுடன் தொடர்ந்து விளம்பரம் வெளியிட்டு வந்தது. ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகளை முன்வைத்தும் வார இதழ் ஒன்றில் அந்த நிறுவனத்தின் விளம்பரம் இடம்பெற்றிருந்தது,
தில், தாமரையைப் போல... நோட்டாவை விட குறைவாக வெளியூர் கட்டணம் என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. ஆர்,கே. நகர் இடைத் தேர்தலில் நோட்டாவிடம் பாஜக தோற்றதைக் குறிப்பிடும் வகையிலான மீம்ஸ்களின் தாக்கத்தில் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டிருக்கிறது,
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் கால்டாக்சி நிறுவனத்தினர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளனர். அதில் பாஜகவின் பெயரால் தங்களுக்கு மிரட்டல் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் ஆடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதில் தம்மை பாஜகவைச் சேர்ந்தவர் கூறிக் கொள்ளும் நபர் அந்த கட்சியின் பெயராலேயே வசை சொற்களை பயன்படுத்தி மிரட்டல் விடுத்திருக்கிறார்.
இதனிடையே இந்த விளம்பரத்தை நீக்க வேண்டும் என பாஜக நிர்வாகிகள் சிலரும் அந்த நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். ஆனால் 2ஜி, ரஜினிகாந்த், ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது போன்ற அனைத்து பிரச்சனைகளை முன்வைத்தும் விளம்பரங்களை வெளியிட்டோம் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது,
A new controversy has erupted over the advertisement of the Chennai Call Taxi Company which was dig at the BJP's performance in RK Nagar By Election.