விக்ரமுடன் 'ஸ்கெட்ச்' படத்தை முடித்து விட்டு, குயின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வந்த தமன்னா, தற்போது ஜெயேந்திரா இயக்கத்தில் நந்தமுரி கல்யாண் ராம் நாயகனாக நடிக்கும், 'நா நுவ்வே' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.
'நா நுவ்வே' படத்தில் ரேடியோ ஜாக்கியாக காமெடி கலந்த ரோலில் நடிக்கிறார் தமன்னா. ரேடியோவில் ஒளிபரப்பாகும் காதலர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை மையமாக வைத்துத்தான் இந்தப் படமே உருவாகிறதாம்.கலகலப்பான காமெடி ரோலில் நடிப்பதோடு, முதன்முறையாக பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவிலும் நடிக்கிறார் தமன்னா. அதனால் கல்யாண்ராமுடன் நடிக்கும் இந்தப் படம் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது எனக் கூறியிருக்கிறார் தமன்னா.நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகதன்மை கொண்டவர் விஜய் ஆண்டனி. வெளி தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க எட்டு கோடி சம்பளம் கேட்கும் இவரிடம்தயாரிப்பு செலவுக்கு 6 கோடியையும் கொடுத்தால் முதல் பிரதி அடிப்படையில் படம் எடுத்து கொடுப்பார் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் வெளியான கடைசி படம் அண்ணாதுரை. இப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை 6.50 கோடிக்கும், கேரள உரிமையை 32 லட்சத்திற்கும் அலெக்சாண்டர் என்பவர் வாங்கினார், விஐய் சேதுபதி நடிப்பில் தயாரான கருப்பன் படத்தை ஏற்கெனவே வாங்கி ரீலீஸ் செய்திருந்தார்.
Cinema square-collection of cinema news which is going viral