பிள்ளைகளை அடமானம் வைக்க அனுமதி கோரி ஆட்சியரிடம் தந்தை மனு- வீடியோ

2018-01-09 94


தாட்கோவில் கடன் கேட்டு பலமுறை அலக்கழிக்கப்பட்டதால் பெற்ற குழந்தையை அடமானம் வைக்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூரை சேர்ந்தவர் கண்ணன். இவர் வாடகை பாத்திரம் செய்யும் தொழில் நடத்துவதற்காக தாட்கோவில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பித்து பல மாதங்கள் ஆகியும் கடன் வழங்காமலும் விசாரணை செய்யப்படாமலும் இருந்ததால் மனமுடைந்த அவர் மாவட்ட ஆட்சியர் லதாவிடம் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் தாட்கோவில் கடன் கேட்டு விண்ணப்பித்து அலைகழிக்கப்படுவதால் தனது இரு குழந்தைகளையும் அடமானம் வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணன் கொடுத்த புகார் குறித்து விசாரணை நடத்திட ஆட்சியர் உத்தரவிட்டதையடுத்து போலீசார் கண்ணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Des : The incident that has been reported to the District Collector demanded permission to mortgage the child who had been given several times to ask for a loan in Thadko.



Videos similaires