'விக்ரம் வேதா' படத்தின் வெற்றிக்கு அப்படத்திற்கு இசை அமைத்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ் மிகப் பெரிய காரணம். அந்தப் படம் வெளியானபோது சாம் உருவாக்கிய பின்னணி இசை மிகவும் கவனிக்கப்பட்டு பாராட்டப்பட்டது. 'விக்ரம் வேதா' படத்தைத் தொடர்ந்து சாம் சி.எஸ்-க்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'விசுவாசம்' பட வாய்ப்பு ஜஸ்ட் மிஸ்ஸான நிலையில் மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் 'ஒடியன்' படத்திற்கு பின்னணி இசை அமைக்கும் வாய்ப்பு சாம் சி.எஸ்ஸுக்கு கிடைத்திருக்கிறது. 'ஒடியன்' திரைப்படம் பின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படமாம். ஸ்ரீகுமார் மேனன் இயக்கி வரும் இந்தப் படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இப்படத்தில் இணைந்துள்ளார் சாம் சி.எஸ். கேரளாவில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை வைத்து எடுக்கப்படும் வித்தியாசமான படம் 'ஒடியன்'. இந்தப் படத்திற்காகத்தான் மோகன்லால் பல பயிற்சிகள் மேற்கொண்டு தனது எடையைக் குறைத்து நடித்து வருகிறார். மோகன்லால் இப்படத்தில் மந்திர தந்திர வித்தைகள் தெரிந்தவராக நடிக்கிறார். ஆக்ஷனில் பட்டையைக் கிளப்பும் வகையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் பின்னணி இசைக்கு நிறைய ஸ்கோப் இருக்கும். அதைப் பயன்படுத்தி வெற்றிபெறுவார் 'விக்ரம் வேதா' மியூசிக் டைரக்டர் என்பதே ரசிகர்களின் கணிப்பு.
After the big success of vikram vedha, music director Sam CS is working with mohan lal in a new malayalam movie..
He very recently missedthe oppurtinuty of directing music for ajith's new movie visvasam.