சவுதி இளவரசர்கள் 11 பேர் கூண்டோடு கைது..வீடியோ

2018-01-08 4,855

சவுதி அரேபியாவின் இளவரசர்கள் 11 பேர் அந்நாட்டு அரசால் கூண்டோடு கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இளவரசர்கள் இப்படி மொத்தமாக கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

முதலில் இதற்கு என்ன காரணம் என்று தெளிவாக தெரியாமல் இருந்தது. ஆனால் தற்போது அந்நாட்டு அரசு இரண்டு விதமான காரணங்கள் தெரிவித்து இருக்கிறது.

சவுதியின் முடி இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றத்தில் இருந்து அங்கு நிறைய மாற்றங்கள் கொண்டு வருகிறார். வரிவிதிப்பு முறை தொடங்கி சினிமா தியேட்டர்கள் வரை அந்த நாடு பல மாற்றங்களை சந்தித்து வருகிறது.சவுதியின் இளவரசர்கள் 11 பேர் ஒன்றாக சேர்ந்து போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் குறைவாக நடக்கும் சவுதியில் இப்படி இளவரசர்கள் சேர்ந்து போராட்டம் செய்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தலைநகர் ரியாத்தில் இந்த போராட்டம் நடந்தது. இவர்கள் ஒன்றாக சேர்ந்து கூச்சலிட்டனர்.சவுதியில் சில நாட்களுக்கு முன் வாட் வரி அறிமுகப்படுத்தப்பட்டது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அதேபோல் சவுதி அரசு குடும்பங்களுக்கு வழங்கப்படும் இலவச தண்ணீர் மற்றும் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாகவே போராட்டம் செய்து உள்ளனர்.

11 Saudi Arabia princes were arrested over protesting in Riyadh. Saudi Arabia has introduced Value Added Tax today. They have opposed this tax system.

Videos similaires