'வேலைக்காரன்' படத்தைத் தொடர்ந்து தற்போது பொன்ராம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய 75 சதவிகிதம் முடிந்து விட்ட நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தைப் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிகுமார் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா ஆகியோர் நடித்து வரும் படத்திற்கு 'சீமராசா' என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின. ஆனால் இதுவரை டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்தப் படம் ஏப்ரலில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Siva Karthikeyan's next project has been anounced. Currently, Siva Karthikeyan is acting in Ponram's direction alongside Actress Samantha. After this movie's shooting, he is going to act with Director Ravikumar Rajendran.