கோஹ்லி மாதிரி கணவர் வேண்டும் என்று ஏங்கும் இளம் பெண்கள்- வீடியோ

2018-01-08 6,533

ஒரு புகைப்படத்தை பார்த்து இளம் பெண்கள் கோஹ்லி மாதிரி கணவர் கிடைக்க மாட்டாரா என்று ஏங்குகிறார்கள். கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் கடந்த மாதம் 11ம் தேதி இத்தாலியில் ரகசியமாக திருமணம் நடந்தது. அதை தொடர்ந்து டெல்லி, மும்பையில் இரண்டு முறை திருமண வரவேற்பு நடைபெற்றது. புத்தாண்டை கொண்டாட மனைவி அனுஷ்காவை அழைத்துக் கொண்டு கோஹ்லி தென்னாப்பிரிக்காவுக்கு சென்றார். அங்கு எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார் கோஹ்லி. திருமணத்தை பற்றி யோசிக்கவே நேரம் இல்லை என்று நைசாக டிமிக்கி கொடுத்து வந்த அனுஷ்காவை தனது அதீத காதலை காட்டி சம்மதிக்க வைத்தவர் கோஹ்லி. கிரிக்கெட் பயிற்சியின் போது கோஹ்லி தனது திருமண மோதிரத்தை கழற்றி வைக்காமல் கழுத்தில் இருக்கும் செயினில் கோர்த்துவிட்டுள்ளார். அனுஷ்காவை பிரிய மனமில்லாமல் கோஹ்லி இவ்வாறு செய்வதாக ரசிகைகள் பேசுகிறார்கள்.

Kohli's recent picture with anushka has got a lot of attention from girls around india. during his cricket traunung, kohni did not want to part from his wedding ring and hence put it in a chain around his neck. Young girls find this really sweet, romantic and have been sharing his picture on instagram.

Videos similaires