மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் 5 லட்சம் ரூபாய் அபாரதம் விதித்து ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பீகார் முன்னாள் முதல்வரான லாலுபிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். லாலுபிரசாத் யாதவ் குற்றவாளி என்று ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி தீர்ப்பளித்தது.
கடந்த 1990ஆம் ஆண்டு பீகார் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது மாட்டுத்தீவன ஊழலில் சிக்கினார். சுமார் 950 கோடி ரூபாய் அவர் ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.
இதில் லாலு பிரசாத் உள்ளிட்ட 34 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அதில் 11 பேர் வழக்கு விசாரணையின் போதே இறந்து விட்டனர். ஒருவர் மட்டும் அப்ரூவராக மாறி குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
Ranchi CBI court sentences Lalu Prasad Yadav to 3.5 years in jail, fines him Rs 5 lakh in fodder scam. And another accused Jagdish Sharma gets 7 years in jail, imposed with a fine of Rs. 10 lakh.