மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால் அவரது வீடு நான்கு மாதத்தில் நினைவு இல்லமாக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவர் வசிக்கும் போயஸ் கார்டன் இல்லத்தை மக்கள் வெளியே இருந்தபடியே பார்க்க பொதுமக்களுக்கு சில நாட்கள் அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து சசிகலாவுடனான மோதலுக்குப் பிறகு போயஸ்கார்டன் இல்லம் நினைவு இல்லம் ஆக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த 30 ஆம் தேதி ஜெயலலிதா வீட்டை ஆர்ஜிதம் செய்வதற்கான முதல்கட்ட பணிகள் நடைபெற்றன. இதற்காக சென்னை கலெக்டர் அன்புச்செல்வன் தலைமையிலான அதிகாரிகள் போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று வீடு முழுவதும் மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
Chennai collector Anbuchelvan says There is no direct heirs to Jayalalitha. Jayalalitha's Poesgarden vedha house will be amemorial house wilthin 4 months he said further.