தினகரன் ஆதரவாளர்கள் கொடுத்துள்ள புகார்கள் குறித்து விளக்கம் கொடுத்தால் உரிய பதில் கொடுப்பேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மலேசியாவில் நடைபெறவுள்ள நட்சத்திர கலைவிழாவில் கலந்து கொள்ள நடிகர் கமல்ஹாசன் நேற்றிரவு சென்னையிலிருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்றார்.
இதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கி இருக்கிறார் அதற்கு ஆதரவு கொடுப்பீர்களா ? என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு கமல், ஏற்கனவே வரவேற்பு தெரிவித்து விட்டேன். அதுவே போதுமானது என்றார். டிடிவி. தினகரனின் ஆதரவாளர்கள் உங்கள் மீது காவல் நிலையத்தில் புகார்கள் அளித்து வருகின்றனரே? என கேட்டபோது, அது பற்றி எனக்கு தெரியபடுத்தினால், அதற்குரிய பதிலை தருவேன் என கூறிவிட்டு சென்றார். நடிகர் கமலஹாசன் சமீபத்தில் நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் வாக்காளர்களை பிச்சைக்காரர்கள் எனவும் வேட்பாளரை திருடன் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து டிடிவி தினகரன் ஆதரவாளரான கொங்குநாடு அருந்ததியர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் இளங்கோவன், கோவை 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார். அதில் வாக்காளர்களை இழிவாக பேசியும், எழுதியும் உள்ளதால் கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்திய குற்றவியல் தண்டனை சட்டம் 500 மற்றும் 501 பிரிவுகளின் கீழ் இந்த அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Actor Kamal hassan has said,on Chennai airport, I will answer and face to case.Supporters of TTV Dinakaran have filed a defamation suit against Actor turned politician Kamal Hassan for allegedly defaming the people of RK Nagar and independent candidate TTV Dinakaran in a column written for a Tamil magazine.