வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிட்டு வேலைக்கு திரும்ப உயர்நீதிமன்றம் உத்தரவு- வீடியோ

2018-01-05 1

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்குத்திரும்ப வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் பரிந்துரைத்த நிலையில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று மாலை முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். அரசுடன் நடந்த ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்ட நிலையில் நேற்று மாலையே பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இரவு பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் வேலைநிறுத்தம் தொடரும் என்று தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர். இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தத்தால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
பொது போக்குவரத்து நிறுத்தத்தால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாராகி என்பவர் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.


Madras HC recommended Tamilnadu government to take action against the transport employees who were involved in strike by giving notice to them

Free Traffic Exchange

Videos similaires