தமிழக அரசு போக்குவரத்து நஷ்டத்தில் இயங்க என்ன காரணம் ? போராட்டம் எதனால் ?- வீடியோ

2018-01-05 12

தமிழக அரசு போக்குவரத்து கழகம் பலருக்கும் முன்னோடியாக இருந்த காலக்கட்டம் மாறி தொடர் இழப்புகளையும், இழிவானப்பேச்சுகளுக்கும் ஆளாகி நிற்கிறது. இதற்கு யார் காரணம் என்ற கேள்வி தான் இப்போது எல்லோர் மனதிலும் ஓடிக்கொண்டிருகிறது.

மற்ற மாநிலங்களில் வெறும் தகரத்தால் செய்யப்பட்ட பேருந்துகளை இயக்கிக்கொண்டிருந்த காலத்தில் நவீன பேருந்துகளை இயக்கி மற்ற மாநிலங்களை ஏக்கப்பார்வை பார்க்க வைத்த தமிழக அரசு போக்குவரத்து கழகம் தான் இப்போது ஏளனப்பார்வைக்கு ஆளாகியுள்ளது. லஞ்சம், முறைகேடு, அலட்சியம், காழ்ப்புணர்ச்சி, பொறுப்பின்மை இப்படி அனைத்தும் சேர்ந்து தான் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் அஸ்தமனத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளன.

சமீபத்தில் டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து விட்டு அங்கு செய்தியாளர்களை சந்தித்த தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக அரசு போக்குவரத்து கழகம் அனைத்து மாநிலங்களை விட நவீனமாக உள்ளதாக கூறினார். அதே சமயம் போக்குவரத்து கழகம் கடும் நஷ்டத்தில் இயங்குவதாக அவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். டெல்லிக்கு சென்று இதனை அவர் பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறார் என்றால் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தை நஷ்டத்திலிருந்து மீட்க முடியாத நிலையில் இருப்பதுதான் அதன் மறைமுக அர்த்தம்.

Detailed analysis about who is responsible for the loss of TN Transport Corporation

Videos similaires