பாட்டியாக நடிக்க ஆசைப்படும் இளம் நடிகை !!- வீடியோ

2018-01-05 5,141

ஜெயம் ரவியின் மகனுக்கு பாட்டியாக நடிக்க ஆசைப்படுகிறார் நிவேதா பெத்துராஜ். சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரவ் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் டிக் டிக் டிக். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இசை வெளியீட்டு விழாவில் நிவேதா பேசியதாவது,

சக்தி சார் என்னை ஒருயோரு முறை தான் பார்த்தார். அதுவும் 5 நிமிடம் தான் பார்த்தார். உடனே ஓகே சொல்லிவிட்டார். எதை வைத்து ஓகே சொன்னாங்க என்று தெரியவில்லை.

அவர் என் மீது வைத்த நம்பிக்கையால் ஸ்டண்ட் உள்ளிட்ட காட்சிகளில் 100 சதவீதம் முழுமையாக என்னை ஈடுபடுத்தி நடித்தேன். ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பது ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஆனால் இந்த டீமுடன் வேலை செய்தது லைட்டா இருந்தது.

மைக்கேல் மாஸ்டரை நான் பலமுறை மனசுக்குள் திட்டியிருக்கிறேன். டிக் டிக் டிக் படப்பிடிப்பு துவங்கும் முன்பு இதில் எப்படி நடிக்கப் போகிறோம் என்று பயந்தேன்.

விதவிதமான கதைகளை தேர்வு செய்து நம்பிக்கையுடன் நடிக்கும் ரவியை போன்று வேறு எந்த ஹீரோவையும் பார்த்தது இல்லை. ஆரவ் குட்டி காட்சி முடிந்ததும் கேரவனுக்கு போக மாட்டாங்க. ஸ்பாட்டிலேயே இருப்பாங்க.

Nivetha Pethuraj who has acted with Jayam Ravi in Tik Tik Tik said that she wants to act in Arav Ravi's 100th film probably as his grand mother. Nivetha is all praise of junior Ravi who is making his debut through Tik Tik Tik.