2018 ஐபிஎல் போட்டிக்கு வீரர்களை திரும்ப எடுக்கும் நடைமுறை நேற்று நடைபெற்றது. இதில் அதிகபட்சம் 5 வீரர்களை அணிகள் மீண்டும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஏலம் எடுக்கப்படுவதற்கு முன்பே மூன்று வீரர்களை மட்டுமே அணிக்கு எடுக்க முடியும். இதற்கான பட்டியலை நேற்று காலைக்குள் அனைத்து அணிகளை சமர்ப்பித்தது. இதற்கான ஒப்பந்தம் நேற்று போடப்பட்டு எந்த வீரர்கள் எந்த அணிக்கு செல்கிறார்கள் என்பது உறுதியானது. ஐபிஎல் ஏலத்திற்கு இன்னும் இரண்டு வாரம் இருக்கும் நிலையில் இந்த 'முன் ஏலம்' இப்போதே வைரல் ஆகி இருக்கிறது.
இதில் சென்னை அணிக்கு ரெய்னா, டோணி, ஜடேஜா ஆகியோர் திரும்பி இருக்கிறார்கள். அதேபோல் மும்பை அணிக்கு ரோஹித், பும்ரா, பாண்டியா திரும்பி உள்ளனர். கோஹ்லி, ஏபி டிவில்லியயர்ஸ், யுஸ்வேந்திர சஹல், பெங்களூர் அணிக்கு திரும்பி உள்ளனர். ஸ்டீவ் ஸ்மித், அஜிங்கியா ரஹானே, ஷான் வாட்சன் ராஜஸ்தான் அணிக்கு சென்றுள்ளனர்.
நேற்று இதற்கான ஒப்பந்தத்தில் டோணி, ரெய்னா, ஜடேஜா மூவரும் கையெழுத்து இட்டனர். ஆனால் இவர்கள் மட்டும் இதை வித்தியாசமாக வீடியோவாக வெளியிட்டார்கள். இந்த மூன்று வீடியோவும் இணையம் முழுக்க வைரல் ஆனது.
நேற்று இதற்கான ஒப்பந்தத்தில் டோணி, ரெய்னா, ஜடேஜா மூவரும் கையெழுத்து இட்டனர். ஆனால் இவர்கள் மட்டும் இதை வித்தியாசமாக வீடியோவாக வெளியிட்டார்கள். இந்த மூன்று வீடியோவும் இணையம் முழுக்க வைரல் ஆனது.
ஹெலிகாப்டர் ஷாட் போலவே இதற்கு டோணி பதில் அளித்தார். அதில் ''ஆமாம் நான் மீண்டும் என் வீட்டிற்கு வந்துவிட்டேன்'' என்றார். மேலும் ''இனி நீ ஐபிஎல் போட்டி பார்க்கலாம்'' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். ஆங்கிலத்தில் இவர்கள் பேசும் வீடியோ வைரல் ஆகியுள்ளது.
Lot of interesting things are going to happen in upcoming IPL season. CSK, Rajasthan team has back to the IPL. IPL 2018 auction will be held in Bangalore on January 27 and 28. Dhoni, Raina, Jadeja contract video got viral. Convo between Dhoni and his wife has became talk of Chennai.