போராட்டத்தில் ஈடுபடுவர்களுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை - அமைச்சர் விஜய பாஸ்கர்- வீடியோ

2018-01-05 1

தொழிற்சங்கங்களுடன் இனி பேச்சுவார்த்தையில்லை என அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் 13வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாகப் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். குரோம்பேட்டையில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. இதையடுத்து நேற்று மாலை முதலே சென்னை மற்றும் புறநகர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பயணிகளை நடு வழியிலேயே இறக்கி விட்டதால் மக்கள் பெரும் அவதியடைந்தனர்.

இதனிடையே போக்குவரத்து ஊழியர்களுக்கு, 2.44% ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இனி 2.44% ஊதிய உயர்வு வழங்க தயார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2013ஆம் ஆண்டிற்கு பிறகு சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு 2.57% ஊதிய உயர்வு வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Minister Vijyabaskar says there is no more talik with the trade unions. He also says trade unions wants the 15 years out standing amount immidiately. He urged trade unoins should back to work immidiately.

Videos similaires