கடந்த இரு வார காலமாக தமிழகத்தில் அரசியல் புயலைக் கிளப்பிய ரஜினிகாந்த், இன்று இரவு மலேசியாவுக்குப் புறப்படுகிறார். அங்கு நாளை மற்றும் நாளை மறுநாள் (ஜனவரி 5-6) நடக்கும் நடிகர் சங்க கலைவிழாவில் கலந்து கொண்டு பேசுகிறார். இன்று இரவு 1 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து மலேசியா செல்கிறார். அவருடன் இணைந்து கமல்ஹாசன் உள்பட 100க்கும் அதிகமான நடிகர், நடிகைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில், கலை நிகழ்ச்சி, நடனம், நகைச்சுவை நிகழ்ச்சி மற்றும் பிரபலங்களின் பேட்டி என சுவாரஸ்யமான பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மேலும், ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 2.0 படத்தின் டீசர் அல்லது டிரைலர் வரும் ஜனவரி 6-ம் தேதி வெளியாகும் என தகவல் பரவியுள்ளது. இதே விழாவில் விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், விஷாலின் சண்டக்கோழி 2, இரும்புத்திரை படத்தின் இசை மற்றும் டிரைலர் ஆகியவையும் வெளியாக உள்ளன.