உங்கள் உள்ளங்கை ரேகை இணைகிறதா ? அப்போ உங்கள் வாழ்க்கை இப்படி தான்,.,..வீடியோ

2018-01-04 17

இரு உள்ளங்கைகளையும் ஒன்று சேர்த்து பார்க்கும் போது, கையில் உள்ள இதய ரேகைகளைப் பாருங்கள். இதய ரேகைகள் ஒரே அளவில் இருக்கிறதா இல்லையா என்றும் பாருங்கள். அப்போது இதய ரேகைகள் ஒரே அளவில் இருந்தால், அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இம்மாதிரியான இதய ரேகைகள் அனைவருக்குமே அமையாது. இதய ரேகை என்றதும் அது நம் இதய ஆரோக்கியத்தைப் பற்றி எதுவும் கூறாது. உண்மையில் இது ஒரு காதல் ரேகை. இது ஒருவரது காதல் வாழ்க்கைக் குறிக்கும்.

கைரேகை ஜோதிடர்கள் கையில் உள்ள இந்த இதய ரேகையின் அளவு மற்றும் அமைப்பைக் கொண்டு தான், ஒருவரது காதல் அல்லது திருமண வாழ்க்கை குறித்து கூறுகின்றனர். எனவே உங்களது வலது மற்றும் இடது கைகளில் உள்ள இதய ரேகையை சோதித்துப் பாருங்கள்.

இம்மாதிரியான இதய ரேகைகளைக் கொண்டவர்களுக்கு துணையாக வருபவர்கள், அவர்கள் மீது கொள்ளை பிரியம் வைத்திருப்பார்கள். இந்த மாதிரியான இதய ரேகை கொண்டவர்களுக்கு அமையும் துணை, அவர்களை நன்கு புரிந்தவர்களாகவும், அனுசரித்து நடந்து கொள்பவர்களாகவும் இருப்பர்.

இந்த மாதிரியான இதய ரேகையைக் கொண்டவர்கள், நல்ல காதலராக இருப்பர். காதலுக்காக எதையும் செய்யக்கூடியவர்களாக இருப்பர். மற்றவர்களைப் பற்றி எதையும் யோசிக்காமல், தனக்கு தோன்றுவதை மட்டும் செய்வார்கள். மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நடக்காமல், தன் இதயம் சொல்வதைக் கேட்டு நடப்பார்கள். மேலும் இவர்கள் சொந்த வரையறையில் வாழ்க்கையை வாழ விரும்புவார்கள் மற்றும் மற்றவர்களது கருத்துக்களின் மீது அக்கறை கொள்ளமாட்டார்கள்.


Matching Heart Line in Palms will reveal your romantic inclination, attitude and approach in love, married life, nature of spouse and relation with children.


Audio Credits :

In Love (feat. Nori) by A Himitsu https://soundcloud.com/a-himitsu
Creative Commons — Attribution 3.0 Unported— CC BY 3.0
http://creativecommons.org/licenses/b...
Music promoted by Audio Library https://youtu.be/8KiCImrQkOs

Videos similaires