மகளின் பிறந்தநாள் அன்று சர்ப்ரைஸ் அளித்த அஜித் !!- வீடியோ

2018-01-04 5,063

மகளின் பிறந்தநாள் அன்று அஜீத் நீலாங்கரையில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருப்போருக்கு பிரியாணி விருந்து கொடுத்துள்ளார்.

அஜீத்தின் மகள் அனோஷ்காவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அனோஷ்காவின் பிறந்தநாளை அஜீத் ரசிகர்கள் போஸ்டர் அடித்து, பேனர் வைத்து, கேக் வெட்டி ஜமாய்த்துவிட்டார்கள்.

அதிலும் குறிப்பாக மதுரையில் கொண்டாட்டம் பெரிய அளவில் நடந்துள்ளது.

மதுரையை சேர்ந்த அஜீத் ரசிகர்கள் அனோஷ்காவின் பிறந்தநாளை தல பிறந்தநாள் அளவுக்கு சிறப்பாக கொண்டாடியுள்ளனர். முதியோர் இல்லங்களுக்கு சென்று உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்கியுள்ளனர்.

நீலாங்கரையில் உள்ள ஜியா குழந்தைகள் இல்லத்திற்கு நேற்று இரவு பிரியாணி அனுப்பி வைத்துள்ளார் அஜீத். இதை இல்லத்தின் நிர்வாகி சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

இன்றிரவு நம் நீலாங்கரை இல்ல குழந்தைகளுக்கு திடீர் சர்ப்ரைஸாக அஜீத் வீட்டிலிருந்து பிரியாணி வந்திருக்கிறது. எனக்கே நம்பமுடியாமல் எப்படி? என கேட்டேன். அவரை இதுவரை சந்தித்ததுகூட இல்லை. புத்தாண்டு கொன்டாட்டத்திற்கு வந்திருந்த ஒரு பெண் நண்பரின் தந்தை அஜீத்திடம் வேலை செய்வதாகவும், எதேச்சையாய் நமது இல்லத்தை பற்றி அறிந்து உடனே பிரியாணி ஏற்பாடு செய்து தனது ட்ரைவரின் மூலம் கொடுத்தனுப்பியிருக்கிறார் நடிகர் அஜீத்! (இன்று அவரது மகளின் பிறந்த தினம் என்பதை சற்றுமுன்பு தான் அறிந்துகொண்டேன்


Ziya Children's home official Mohamad Jailani has posted on his FB page about the surprise briyani treat given to the kids in the home by Thala Ajith on his daughter Anoushka's birthday.