ஜெ. உடலை எம்பாமிங் செய்த மருத்துவர் சுதா சேஷையன் பேட்டி- வீடியோ

2018-01-03 6,804

ஜெயலலிதா உடலை எம்பாமிங் செய்த மருத்துவர் சுதா சேஷையன் ஆறுமுகசாமி கமிஷனில் ஆஜராகி விளக்கமளித்தார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிந்தார். சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்ததையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது. இந்த கமிஷன் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. நேற்று இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா ஆறுமுகசாமி கமிஷன் முன்பு ஆஜராகி விளக்கமளித்தார். இந்நிலையில் ஜெயலலிதா உயிரிழந்த பிறகு அவருக்கு எம்பாமிங் செய்த மருத்துவர் சுதா சேஷையன் ஆறுமுகசாமி கமிஷனில் ஆஜராகியுள்ளார்.

சென்னை எழிலகத்தில் உள்ள ஆறுமுகசாமி அலுவலகத்தில் ஆஜராகியுள்ள அவர், நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். மருத்துவர் சுதா சேஷையன் ஜெயலலிதாவுக்கு நெருங்கிய நபர் மட்டுமின்றி அவர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Videos similaires